Home Featured நாடு தாவாவ் விபத்து: ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்க முயற்சி செய்துள்ளது!

தாவாவ் விபத்து: ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்க முயற்சி செய்துள்ளது!

626
0
SHARE
Ad

tawauதாவாவ் – சபாவிலுள்ள தாவாவ் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பள்ளி ஒன்றின் மேல் விழுந்து விபத்திற்குள்ளான இராணுவ ஹெலிகாப்டர், முன்னதாக அவசரமாகத் தரையிறங்க முயற்சி செய்ததாக மலேசிய விமானப்படை (ஆர்எம்ஏஎப்) அறிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிலையில், அதிலிருந்த 14 பேர் காயங்களின்றி உயிர் தப்பியதாகவும் ஆர்எம்ஏஎப் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7.35 மணியளவில், இராணுவ விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து ஆர்எம்ஏஎப் விசாரணை நடத்தி வருகின்றது.