Home Featured தமிழ் நாடு காவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்கின்றனர் அதிமுக எம்.பிக்கள்!

காவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்கின்றனர் அதிமுக எம்.பிக்கள்!

694
0
SHARE
Ad

Narendra Modiசென்னை – காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த  சில நாட்களுக்கு முன்பு வரை ஆதரவு தெரிவித்து வந்த மத்திய அரசு, சமீபத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டது. இதன் பின்னணியில் கர்நாடகம் சார்ந்த பா.ஜ.க-வின் அரசியல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த திடீர் மாற்றம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி நீர்திறப்பை உறுதி செய்யக் கோரியும், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க இருக்கின்றனர்.