Home Featured இந்தியா சிங்கப்பூர் பிரதமர் லீ இந்தியா வருகை: ஆடம்பர வரவேற்பை நிராகரித்தார்!

சிங்கப்பூர் பிரதமர் லீ இந்தியா வருகை: ஆடம்பர வரவேற்பை நிராகரித்தார்!

753
0
SHARE
Ad

singapore

புது டெல்லி – சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், ஐந்து நாள் பயணமாக நேற்று திங்கட்கிழமை மாலை இந்தியா வந்தடைந்தார். லீயுடன் அவரது மனைவி ஹோ சிங் மற்றும் துறை ரீதியிலான மூத்த அமைச்சர்களும் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய பயணத்தின் முதல் கட்டமாக, இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திரமோடியை, லீ சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியா வந்தடைந்த சிங்கப்பூர் பிரதமருக்கு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. எனினும் அதனைத் தவிர்த்த லீ, சாதாரண பேருந்தில் பயணித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.