Home Featured உலகம் ஜப்பானில் சக்தி வாய்ந்த சூறாவளி: 125 விமானங்கள் இரத்து!

ஜப்பானில் சக்தி வாய்ந்த சூறாவளி: 125 விமானங்கள் இரத்து!

670
0
SHARE
Ad

typhoon-maysak

டோக்கியோ – நேற்று திங்கட்கிழமை ஜப்பானின் ஓகினாவா தீவுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூறாவளிக் காற்று காரணமாக, கிட்டத்தட்ட 125 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

இது குறித்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில், தெற்கே மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் ஓகினாவா தலைநகர் நாகாவை நோக்கி வீசிய புயல், பின்னர் வடக்கு நோக்கித் திரும்பியதாகத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனால், ஜப்பானின் இரண்டு பெரிய விமான நிறுவனங்களான, ஆல் நிப்பான் ஏர்வேஸ் மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் 125 உள்ளூர் விமானங்கள், சூறாவளி காரணமாக இரத்து செய்யப்பட்டன.