Home One Line P2 மாஸ்டர் : விஜய் பாடும் “ஒரு குட்டி ஸ்டோரி” பாடல் கேட்போமா?

மாஸ்டர் : விஜய் பாடும் “ஒரு குட்டி ஸ்டோரி” பாடல் கேட்போமா?

940
0
SHARE
Ad

சென்னை – வழக்கம்போல் விஜய் நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படம் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. விஜய் சேதுபதி வில்லனாக இணைவது, “கைதி” என்ற பரபரப்பான வெற்றிப்படத்தைத் தந்த லோகேஷ் கனகராஜின் இயக்கம், அண்மையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் வருமான வரி இலாகாவின் அதிரடி சோதனைக்கு உள்ளானது – என பல சர்ச்சைகளினால் மாஸ்டர் படத்திற்கான இரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

எதிர்வரும் ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் தனது சொந்தக் குரலில் பாடியிருக்கும் “மை குட்டி ஸ்டோரி” என்ற ஆங்கிலமும் தமிழும் கலந்த சுவாரசியமான வரிகளைக் கொண்ட பாடல், அனிருத் இசையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (பிப்ரவரி 14) சமூக ஊடகங்களில் வெளியானது.

அருண்ராஜா காமராஜ்  இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

#TamilSchoolmychoice

கீழ்க்காணும் இணைப்பில் அந்தப் பாடலைக் கேட்கலாம்: