பெய்ஜிங்: பெய்ஜிங்கிற்கு திரும்பும் அனைவரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று சீன அரசு அறிவித்துள்ளதாக சீன தொலைக்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை மாலை தனது இணையதளத்தில் அறிவித்திருந்தது.
இந்த புதிய கட்டுப்பாட்டுக்கு இணங்காதவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகுவார்கள் என்று அது தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை நகராட்சி மட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது.
பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கும், கொரொனாவைரஸ் பாதிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவதற்கும் இடையே சரியான சமநிலையை அமைக்க சீனாவின் தலைவர்கள் இன்னமும் போராடி வருகிறார்கள் என்பதற்கான சமீபத்திய அறிகுறியாக இது அமைந்துள்ளது.
பயணத் தடைகள் மற்றும் தனிமைப்படுத்தல்கள் போன்ற நடவடிக்கைகள், நிறுவனங்கள் முழு உற்பத்தியைத் தொடங்குவதற்கு போதுமான தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதைத் தடுக்கக்கூடும் என்று தேசியத் தலைவர்கள் கவலைப்படும் நிலையில், பெய்ஜிங் நகராட்சித் தலைவர்கள் நகரில் வெள்ளிக்கிழமை மாலை கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி உள்ளனர்.
இந்த கொள்கையானது நாட்டின் கிராமப்புறங்களிலிருந்து திரும்பும் மக்கள், நாட்டின் உயரடுக்கு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகளை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வாரம் சீன அரசாங்கம் கொவிட்-19 தொடர்பான வழக்குகளை கண்காணிக்கும் அளவுகோல்களை மாற்றிய பின்னரும், தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
முந்தைய சனிக்கிழமையன்று, அதிகாரிகள் 2,641 புதிய கொரொனாவைரஸ் வழக்குகளையும் 143 கூடுதல் இறப்புகளையும் பதிவிட்டுள்ளனர்.
மொத்தத்தில், உலகளவில் 66,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தது 1,523 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.