Home One Line P2 கொவிட்-19: சீன அரசின் கட்டுப்பாட்டால் பாதிப்பு குறைந்துள்ளது, மரண எண்ணிக்கை 1,765-ஆக உயர்வு !

கொவிட்-19: சீன அரசின் கட்டுப்பாட்டால் பாதிப்பு குறைந்துள்ளது, மரண எண்ணிக்கை 1,765-ஆக உயர்வு !

570
0
SHARE
Ad

பெய்ஜிங்: சீனாவின் ஹூபேயில் மொத்தம் 1,933 புதிய கொவிட்-19 தொற்று நோய்க்கான வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்றுவரை இப்பகுதியில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 58,182 வழக்குகள் ஆகும்.

ஹூபே சுகாதார ஆணையத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் 100 புதிய இறப்புகளை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தது. ஹூபேயில் மட்டும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,696- ஆக உள்ளது.

தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஒரு புதிய படியை அறிவித்தனர். அதாவது, ஹூபேயில் உள்ள அனைத்து நகரங்களிலும் எந்தவொரு தனியார் வாகனங்களையும் சாலையில் செலுத்துவதற்கு அரசு தடை செய்தது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், சீனா முழுவதும், அதிகாரிகள் 2,009 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது சற்று குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய பதிவின் மூலம், கொவிட் -19 தொற்று நோயால் மரணமுற்றவர்களின் என்ணிக்கை 1,765-ஆக பதிவாகி உள்ளது. மேலும், 70,445 வழக்குகள் இது தொடர்பாக பதிவாகி உள்ளதாக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.