Home One Line P2 கொவிட்-19: வுச்சாங் மருத்துவமனை இயக்குனர் லியு ஜிமிங் காலமானார்!

கொவிட்-19: வுச்சாங் மருத்துவமனை இயக்குனர் லியு ஜிமிங் காலமானார்!

613
0
SHARE
Ad

பெய்ஜிங்: சீனாவின் வுஹான் வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங், கோவிட் -19 காரணமாக பலியானார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

சீன தொலைக்காட்சி அறிக்கையை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் காலை 10.30 மணியளவில் லியு மரணமுற்றதாக அறிவித்தது.

50 வயதான லியு, நரம்பியல் அறுவை சிகிச்சையில் முன்னணி நபராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கிருமியின் காரணமாக பலியான ஏழாவது சுகாதார பணியாளர் இவராவார்.

#TamilSchoolmychoice

கொரொனாவைரஸ் பாதிப்பின் மையமாக இருந்த பகுதியில் அமைந்துள்ள வுஹான் வுச்சாங் மருத்துவமனை, கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அர்ப்பணிக்கப்பட்டது.

கடந்த வாரம், பிப்ரவரி 11 வரை மொத்தம் 1,716 சுகாதார அதிகாரிகள் கொவிட் -19- க்கு ஆளாகி இருந்ததாக சீன அமலாக்கப் பிரிவுகள் தெரிவித்தன.