Home One Line P2 கொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது!

கொவிட்-19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனித இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது!

803
0
SHARE
Ad

பெய்ஜிங்: சியாவோ பாவோ (Xiao Bao) என்ற மனித இயந்திரம் மருத்துவ ஊழியர்களால் பயிற்சியளிக்கப்பட்டு பெய்ஜிங்கின் ஹைடியன் மருத்துவமனையில் ஒரு வாரமாக நோயாளிகளின் நிலையை பரிசோதித்து வருகிறது.

இது பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கியிருக்கும் படுக்கைகளைச் சுற்றி வளம் வந்து கொண்டிருக்கிறது.

மருத்துவ ஊழியர்களால் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும், இந்த மனித இயந்திரம் மருந்துகளை வழங்குகிறது, வெப்பநிலையை எடுத்துக்கொள்கிறது, மேலும் மருத்துவ முன்னெச்சரிக்கைகள் குறித்து நோயாளிகளுக்கு கல்வி கற்பிப்பதில் நேரத்தை செலவிடுகிறது.

#TamilSchoolmychoice

நோயால் பாதிகப்பட்டவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் மருத்துவ பணியாளர்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுவதாக தொற்று நோய்கள் துறை இயக்குனர் டோங் ஜியான்பிங் கூறினார்.

“நோயாளிகளின் நிலைமையை மிகக் குறுகிய காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் நாங்கள் நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அந்த நேரத்தில் எனது மிகப்பெரிய அக்கறை எனது சகாக்கள் தான்.”

“நோயாளிகள் நன்கு கவனித்துக் கொள்ளப்பட வேண்டும். அவர்களின் நிலை சீரானபோது, ​​எங்கள் பணியாளர்கள் போதுமான அளவு பாதுகாக்கப்பட்டனரா, என் நண்பர்கள் நோய்த்தொற்று அபாயத்தில் இருக்கிறார்களா என்று நான் கவலைப்படத் தொடங்கினேன். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் காலம் முழுவதும் நான் கவலைப்பட்டேன்” என்று டோங் கூறினார் .

மனித இயந்திரத்தைப் பற்றிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், மருத்துவர்களும் நோயாளிகளும் இப்போது சியாவோ பாவ் வழியாக நேரில் பேசுவதை விட நீண்ட நேரம் பேசலாம்.

“இது (மனித இயந்திரம்) நோயாளிகளிடம் செல்லக்கூடும், மேலும் கவலைகளைத் தீர்ப்பதற்காக நோயாளிகளுடன் சுதந்திரமாகப் பேசலாம். தொற்றுநோய்க்கான ஆபத்து இல்லாமல், நோயாளிகளுடன் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் எளிதில் பேசலாம்,” என்றார் டாங் கூறினார்.