Home One Line P2 கொவிட்-19: பலி எண்ணிக்கை 2,120-ஆக பதிவு, நோய் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது!

கொவிட்-19: பலி எண்ணிக்கை 2,120-ஆக பதிவு, நோய் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது!

721
0
SHARE
Ad

பெய்ஜிங்: சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று புதன்கிழமை மொத்தம் 349 கொவிட் -19 தொடர்பான புதிய வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த எண்ணிக்கை முந்தைய நாள் பதிவு செய்யப்பட்ட 1,693 வழக்குகளுடன் மிகக் குறைவாகும்.

ஹூபேயில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 62,031 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

இதன் விளைவாக ஹூபேயில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று புதன்கிழமை 2,029 பேரை எட்டியது.

வுஹான் 88 புதிய இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது. வுஹானில் மொத்தம் 1,585 பேர் இந்த வைரஸால் இறந்துள்ளனர்.

உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 2,120-ஆக உயர்ந்துள்ளது.