புதன்கிழமை பிற்பகுதியில், அடையாளம் தெரியாத தாகுதல்காரர்கள் ஹனாவுவில் இரண்டு ஷிஷா மதுக்கடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்த தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
“சந்தேகநபர் ஹனாவிலுள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். மேலும், காவல் துறை படையினரும் அங்கு மேலும் ஒரு சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. தற்போது, மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை” என்று காவல் துறை தங்களது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.