Home One Line P1 கொவிட்-19: சீனாவில் கூடுதல் 109 இறப்புகள் பதிவு!

கொவிட்-19: சீனாவில் கூடுதல் 109 இறப்புகள் பதிவு!

588
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீனாவில் நேற்று வெள்ளிக்கிழமை வரையிலும் கொவிட்-19 நோய்த்தொற்றுகள் 397 வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், கூடுதலாக 109 இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்று சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் சீனாவில் வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 76,288-ஆக அதிகரித்து, 2,345 பேர் மரணமடைந்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

2,393 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக மாநில சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மொத்தமாக 20,659 நோயாளிகள் வெளியெறி உள்ளதாக அது தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், சீனா க்டந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளுக்கான புள்ளிவிவரங்களையும் திருத்தி உள்ளது.

பிப்ரவரி 19-ஆம் தேதி, புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 394 முதல் 820 வரை திருத்தப்பட்டதாக அது கூறியது. பிப்ரவரி 20-ஆம் தேதி நிலவரப்படி, 75,891 ஒட்டுமொத்த உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 75,465-ஆக குறைக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொவிட்- 19 நோய் தொற்றுக் காரணமாக இத்தாலியில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளதாக அன்சா உள்ளூர் செய்தி இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.