பெய்ஜிங்: கொரொனாவைரஸ் நோயின் (கொவிட்-19) இறப்பு எண்ணிக்கை சீனாவின் பிரதான நிலப்பரப்பில் 2,592- ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 77,150- ஆக உள்ளதாக நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி 24,734 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோயினால் ஏற்படும் நிமோனியாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வரும் 49,824 பேரில் 9,915 பேர் மோசமான நிலையில் உள்ளனர் என்று ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், சீனாவில் 409 புதிய கொரொனாவைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 150 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 149 மரணங்கள் ஹூபே மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது.
இதனிடையே, தென் கொரியாவில் கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 763 நபர்களாக அதிகரித்துள்ளது. மேலும், ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.