Home One Line P1 மகாதீரைச் சந்தித்த பின்னர் அன்வார் குழுவினர் வெளியேறினர்

மகாதீரைச் சந்தித்த பின்னர் அன்வார் குழுவினர் வெளியேறினர்

517
0
SHARE
Ad

செர்டாங் – (பிற்பகல் 1.30 மணி நிலவரம்)

இங்குள்ள பிரதமர் துன் மகாதீரின் இல்லத்திற்கு இன்று காலையில் வந்து சேர்ந்த அன்வார் இப்ராகிம், அவரது துணைவியாரும் துணைப் பிரதமருமான வான் அசிசா, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு ஆகியோரை உள்ளிட்ட குழுவினர் அவரைச் சந்தித்த பின்னர் அங்கிருந்து பிற்பகல் 12.30 மணியளவில் வெளியேறினர்.

எனினும் அந்தச் சந்திப்பு குறித்த விவரங்களை இருதரப்புகளின் சார்பிலும் இதுவரையில் யாரும் வெளியிடவில்லை.

  • அன்வார், தனது துணைவியாரோடு தற்போது பிகேஆர் தலைமையகம் வந்து சேர்ந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து மாமன்னரைச் சந்திக்க பிற்பகல் 2.30 மணியளவில் ஜாலான் டூத்தாவில் உள்ள மாமன்னரின் அரண்மனைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மாமன்னரின் அரண்மனையின் முன்னால் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்திரிகையாளர்களும் பெருமளவில் அங்கு குழுமியிருக்கின்றனர்.
  • இதற்கிடையில் லிம் குவான் எங் கோலாலம்பூரில் நடைபெறும் ஜசெக மத்திய செயலவையின் அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கு சென்றிருக்கிறார்.
  • நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் அமினுடின் ஹாருண் இன்று காலை நெகிரி செம்பிலான் ஆளுநர் துவாங்கு முஹ்ரிசை சந்தித்தார். அதிகாரபூர்வ அறிவிப்பு இருப்பின் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்த மந்திரி பெசார், மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆளுநர் விளக்கம் பெற விரும்பினார், நானும் விளக்கம் கொடுத்தேன் என்றும் மட்டும் கூறியிருக்கிறார்.