Home One Line P1 அஸ்மின் உட்பட 11 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகல்!

அஸ்மின் உட்பட 11 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகல்!

517
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் அவருக்கு ஆதரவளித்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அஸ்மின் அதிகாரிகள் சமீபத்தில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விவகாரம் அறிவிக்கப்பட்டது.

முகமட் அஸ்மின் அலி (கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர்), சுரைடா கமாருடின்
(அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர்), சைபுடின் அப்துல்லா (இண்டெரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர்), பாரு பியான் (செலாங்காவ் நாடாளுமன்ற உறுப்பினர்), கமாருடின் ஜாபர் (பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர்), மனசோர் ஒத்மான் (நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினர்), ராஷீட் ஹஸ்னான் (பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர்), டாக்டர் சந்தாரா குமார்
(சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர்), அலி பிஜு (சாராடோக் நாடாளுமன்ற உறுப்பினர்), வில்லி மோங்கின் (போர்னியோ புன்சாக் நாடாளுமன்ற உறுப்பினர்) மற்றும் ஜொனாதன் யாசின் (ரானாவ் நாடாளுமன்ற உறுப்பினர்) ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.