Home One Line P1 பெர்சாத்துவில் மீண்டும் இணைகிறாரா மகாதீர்? பொதுச் செயலாளர் அறிவிப்பு!

பெர்சாத்துவில் மீண்டும் இணைகிறாரா மகாதீர்? பொதுச் செயலாளர் அறிவிப்பு!

514
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் கடந்த திங்களன்று பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் மீண்டும் அப்பதவியில் அமர இருப்பதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

பெர்சாத்து பொதுச்செயலாளர் மார்சுகி யஹ்யா இதனை உறுதிப்படுத்தியதாக அச்செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை , மகாதீர் தனது உரையில், பெர்சாத்து அம்னோவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதால் வருத்தப்படுவதாகவும், அவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் காரணம் கூறினார்.