Home One Line P1 ஜோகூரில் புதிய கூட்டணி அமைக்கப்படும்- அரண்மனை அறிவிப்பு!

ஜோகூரில் புதிய கூட்டணி அமைக்கப்படும்- அரண்மனை அறிவிப்பு!

641
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு அம்மாநிலத்தில் ஒரு புதிய கூட்டணி உருவாக இருப்பதாக ஜோகூர் அரண்மனை அறிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை அரண்மனையில் பெர்சாத்து கட்சியின் மந்திரி பெசார் டாக்டர் சஹாருடின் ஜாமால் மற்றும் ஜோகூர் அம்னோ தலைவர் ஹாஸ்னி முகமட் ஆகியோர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்காண்டாரை சந்தித்ததை அடுத்து இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின் உட்பட 56 சட்டமன்ற உறுப்பினர்களில் 54 பேரை ஆட்சியாளர் நேர்காணல் செய்தார்.

#TamilSchoolmychoice

அந்த அறிக்கையின்படி, இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமானா துணைத் தலைவர் சலாவுடின் அயோப் மற்றும் ஜோகூர் பெர்சாத்து தலைவர் மஸ்லான் புஜாங் ஆகியோர் இதில் இடம்பெறவில்லை.

புதிய கூட்டணிக்கு 28 பேர் ஆதரவளித்ததாகவும், 26 பேர் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரித்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.