Home இந்தியா முல்லைப் பெரியாறு அணை வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு அணை வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு

571
0
SHARE
Ad

7a4e0079-d533-4961-96dc-f91f2c5b05c11டெல்லி, ஏப்.9 -முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 23ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது, கேரள மாநிலம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரி சால்வே, கால அவகாசம்  கோரியதால், வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். லோதா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதுவரை நடந்து முடிந்த விசாரணையில், அணையின் பாதுகாப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வினோத், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து இறுதி விசாரணை விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.