Home 13வது பொதுத் தேர்தல் புத்ரா ஜெயாவில் தெங்கு அட்னானை எதிர்த்து பாஸ் கட்சியின் ஹூசாம் மூசா போட்டி உறுதி!

புத்ரா ஜெயாவில் தெங்கு அட்னானை எதிர்த்து பாஸ் கட்சியின் ஹூசாம் மூசா போட்டி உறுதி!

642
0
SHARE
Ad

Husam-Musa-2-Sliderஏப்ரல் 9 – மாராங் தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ள பாஸ் கட்சித் தலைவர் ஹாஜி ஹாடி அவாங், பாஸ் கட்சி போட்டியிடும் சில முக்கிய தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார்.

புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவோம் என மக்கள் கூட்டணியும் தேசிய முன்னணியும் மீண்டும் மீண்டும் முழக்கமிட்டு வரும் நிலையில் உண்மையிலேயே புத்ரா ஜெயாவைக் கைப்பற்றப் போவது யார் – அதாவது புத்ரா ஜெயா நாடாளுமன்ற தொகுதியைக் கைப்பற்றப் போவது யார் என்ற பரபரப்பு தற்போது எழுந்துள்ளது.

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் புத்ரா ஜெயா தொகுதியைத் தற்காத்துக் கொள்வதற்கு தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்த்து பாஸ் கட்சியின் உதவித் தலைவரும், கிளந்தான் மாநில நடப்பு ஆட்சிக் குழு உறுப்பினருமான ஹூசாம் மூசா போட்டியிடுவார் என ஹாடி அவாங் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியில் கவர்ச்சிகரமான தோற்றமுடைய தலைவர்களுள் ஒருவரான ஹூசாம் மூசா புத்ரா ஜெயாவுக்கான பொருத்தமான தேர்வாக கருதப்படுகின்றார்.

காரணம், அதிகமான மலாய்க்கார வாக்காளர்களையும், அரசு ஊழியர்களையும் கொண்ட புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற ஹூசாம் மூசாவின் கவர்ச்சிகரமான அணுகுமுறை சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே வேளையில் கிளந்தான் மாநிலத்துக்காரராக இருப்பதால் அரசு ஊழியர்களில் கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளையும் ஹூசாம் மூசாவால் கவர முடியும்.

கடந்த பொதுத் தேர்தலில்  2,734 வாக்குகள் பெரும்பான்மையில் இந்த தொகுதியில் தெங்கு அட்னான் வெற்றி பெற்றார்.

இந்த முறை 15,798 வாக்காளர்களைக் கொண்ட புத்ரா ஜெயா தொகுதியில் 94 சதவீத வாக்காளர்கள் மலாய்க்காரர்கள் ஆவர். இந்தியர்கள் 3 சதவீதத்தினர் என்பதோடு, மற்ற இன வாக்காளர்கள் இரண்டு சதவீதம் உள்ளனர்.