Home One Line P1 மகாதீர் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார்!

மகாதீர் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார்!

456
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இடைக்கால பிரதமரும், பெர்சாத்துவின் தலைவருமான டாக்டர் மகாதீர் முகமட் தனது கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்று வெள்ளிக்கிழமை சந்திக்கிறார்.

பிரதமர் பதவிக்கான கட்சி வேட்பாளர் மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து டாக்டர் மகாதீர் கலந்துரையாடுவார் என்று நம்பப்படுகிறது.

222 நாடாளுமன்ற இடங்களிலிருந்து 26 உறுப்பினர்கள் பெர்சாத்துவைச் சேர்ந்தவர்கள்.

#TamilSchoolmychoice

பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் மொகிதின் யாசின், சைட் சாத்திக் (மூவார்), ரொனால்ட் கியாண்டி (பெலூரான்), அமிருடின் ஹம்சா (குபாங் பாசு), ரினா ஹாருன் (திதிவாங்சா), மஸ்லீ மாலிக் (சிம்பாங் ரெங்காம்) மற்றும் பெர்சாத்து பொதுச் செயலாளர் மார்சுகி யாஹ்யா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளனர்.

முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் அவரது அணி, ஜிபிஎஸ், வாரிசானிடமிருந்து மகாதீருக்கு ஆதரவு இருந்தபோதிலும், மக்களவையில் அவருக்கு பெரும்பான்மையைப் பெறுவது இன்னும் போதுமானதாக இல்லை.

தேசிய முன்னணி மற்றும் பாஸ் அவருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டதை அடுத்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.