Home One Line P1 ஜோகூர் நம்பிக்கைக் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், ஜோகூர் சுல்தானை உடனே சந்திக்க விண்ணப்பம்!

ஜோகூர் நம்பிக்கைக் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், ஜோகூர் சுல்தானை உடனே சந்திக்க விண்ணப்பம்!

722
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய் மெயில்

ஜோகூர் பாரு: தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினரகள் ஜோகூர் சுல்தானை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜோகூர் மாநில சட்டசபையில் புதிய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நேற்று வியாழக்கிழமை ஜோகூர் அரண்மனை அறிக்கை வெளியிட்டதற்கு பிறகு நேற்றிரவு இந்த அறிவிப்பை நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளான பிகேஆர், அமானா மற்றும் ஜசெக அறிவித்தது.

28 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக ஜோகூர் அமானா தலைவர் அமினோல்ஹுதா ஹசான் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இது அமான கட்சியைச் சேர்ந்த ஒன்பது பேரும், ஜசெகவிலிருந்து 14 பேரும், பிகேஆரிடமிருந்து ஐந்து பேரும், இன்றிரவு (நேற்று) கூட்டத்தில் கலந்து கொண்டனர்.”

“எனவே புதிய கூட்டணிக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லை” என்று அவர் கூறினார்.