Home One Line P1 மகாதீரின் அறிவிப்பு, மாமன்னர் உரிமையை மீறியச் செயல்!- நம்பிக்கைக் கூட்டணி

மகாதீரின் அறிவிப்பு, மாமன்னர் உரிமையை மீறியச் செயல்!- நம்பிக்கைக் கூட்டணி

544
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், மக்களவை அமர்வில் பெரும்பான்மை அறிவிக்கப்படும் என்று மாமன்னருக்கு முன்னமே அறிக்கையை வெளியிட்டிருக்கக்கூடாது என்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு தெரிவித்துள்ளது.

அவசரக் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஒரு பிரதமரை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசியலமைப்பின் பிரிவு 40 (2) ( ஏ)- க்கு இணங்க மாமன்னரிடம் உள்ளது என்று அது கூறுகிறது.

“ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற அமர்வுகளுக்கான அழைப்பு குறித்த இடைக்கால பிரதமரின் அறிவிப்பு மாமன்னரின் உரிமைகளுக்கு ஒரு சவாலாகும்.”

#TamilSchoolmychoice

“இந்த விஷயத்தை விவாதிக்க மாமன்னர் ஆட்சியாளர்கள் மன்றத்தை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மாமன்னரின் விருப்பத்தையும் அதிகாரத்தையும் மதிக்குமாறு நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது, ”என்று அது கூறியது.