Home One Line P1 11.30 மணியளவில் ஆட்சியாளர்கள் மன்றம் கூடுகிறது!

11.30 மணியளவில் ஆட்சியாளர்கள் மன்றம் கூடுகிறது!

604
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாமன்னர் அரண்மனையில் சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தடைந்துள்ளனர்.

நாட்டின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதாக நம்பப்படும் இந்த கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா, சுல்தான் மிசான் சைனால் (திரெங்கானு), சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா (சிலாங்கூர்), சுல்தான் அல் அமினுல் காரிம் சலேவுடின் (கெடா), சுல்தான் ஆகியோர் சிறப்பு கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.