கோலாலம்பூர்: பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க மக்களவை வருகிற திங்களன்று (மார்ச் 2) கூடும் என்று இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்ததற்கு அம்னோ பொதுச்செயலாளர் அன்வார் மூசா தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.
“பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்க மக்களவை அங்கீகரிக்க எந்த அங்கீகாரமும் இல்லை. பெரும்பான்மையினரின் ஆதரவைக் கொண்ட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் நியமிப்பது மாமன்னரின் கட்டுபாட்டுக்குள் உள்ளது.”
“மறுபரிசீலனைக்குப் பிறகு போதுமான ஆதரவு இல்லை என்றால், மக்களவையை கலைக்க முடிவு செய்யலாம் அல்லது தொடர வேறு வழிகளைக் கண்டறியலாம்” என்று அனுவார் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே, மற்றொரு பதிவில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகிற மார்ச் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை அமர்வை புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.