Home One Line P1 தேர்தல் நடந்தால் பெர்சாத்து மண்ணைக் கவ்வும்!- சேவியர் ஜெயகுமார்

தேர்தல் நடந்தால் பெர்சாத்து மண்ணைக் கவ்வும்!- சேவியர் ஜெயகுமார்

871
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் பெர்சாத்து முழுமையாக அழிக்கப்படும் என்று பிகேஆர் உதவித் தலைவர் சேவியர் ஜெயகுமார் எச்சரித்தார்.

“பெர்சாத்து தற்போது குழப்பத்தில் உள்ளது. இந்த சூழ்நிலை தேர்தலுக்கு வழிவகுத்தால், அக்கட்சி தோல்வியை எதிர்கொள்ளக்கூடும் அல்லது அந்த விஷயத்தில் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“டாக்டர் மகாதீர் முகமட் செய்ய வேண்டியது என்னவென்றால், ஐந்து அமைச்சரவை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து, மீண்டும் நியமித்து, அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியது” என்று அவர் பெயர்களைக் குறிப்பிடாமல் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி இல்லாமல் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒரு சதி மகாதீர் தலைமையில் நடந்து வருவதாக அவர் கூறினார்.

மகாதீர் தனது அதிகாரத்தை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் சமாதானமாக ஒப்படைத்திருக்கலாம் என்று அவர் கூறினார்.