Home One Line P1 மகாதீருக்கு பெரும்பான்மை உள்ளது- நம்பிக்கைக் கூட்டணி ஆதரவு!

மகாதீருக்கு பெரும்பான்மை உள்ளது- நம்பிக்கைக் கூட்டணி ஆதரவு!

873
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மை தமக்கு இருப்பதாக இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார்.

இன்று காலை சனிக்கிழமை நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களை சந்தித்த பின்னர் அவர் இதனை அறிவித்துள்ளார்.

“மக்களவையில் பெரும்பான்மை ஆதரவைப் பெற தேவையான பெரும்பான்மை தம்மிடம் உள்ளன என்று இப்போது நான் நம்புகிறேன்.”

#TamilSchoolmychoice

“எனவே பிரதமரின் வருங்கால வேட்பாளராக நிற்க நான் தயாராக இருக்கிறேன்.”

“இந்த முடிவு மாமன்னரிடம் தெரிவிக்கப்படும்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணி ஒரு தனி அறிக்கையில், மகாதீரை ஆதரிப்பதாக உறுதிப்படுத்தியது.