Home One Line P2 “கோப்ரா” – விக்ரம் படத்தின் மிரட்டல் தோற்றங்கள் – ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்

“கோப்ரா” – விக்ரம் படத்தின் மிரட்டல் தோற்றங்கள் – ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்

1034
0
SHARE
Ad

சென்னை – விக்ரம் நடிப்பில் அடுத்த படமாக வெளிவரவிருக்கும் “கோப்ரா” – இரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் விக்ரம் பல்வேறு மிரட்டல் தோற்றங்களில் காட்சி தரும் கோப்ரா படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் முதல் தோற்றக் காட்சியை வெளியிட்டிருக்கிறார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவரும் கோப்ரா படத்தில் விக்ரம் 20 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. மையக் கதாபாத்திரமாக ஒரு புகைப்படக்காரராக விக்ரம் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.