கோலாலம்பூர்: அம்னோவை உள்ளடக்கிய ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க தனது கட்சி மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக பெர்சாத்துவின் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாத்திக் அப்துல் ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.
“எனது நாடு உலகத்தால் வெறுப்புடன் பார்க்கப்பட்டு, ஊழலால் தர்மசங்கடத்தில் இருந்த நேரத்தில் நான் ஓர் அரசியல்வாதியாகினேன்.”
“மலேசியர்கள் ஒரு சிறந்த அரசாங்கத்தை எதிர்பார்ப்பதற்கு உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன். ஊழலிலிருந்து விடுபட்டு, மரியாதைக்குரிய மற்றும் கண்ணியத்துடன் இருக்கக்கூடிய அரசாங்கத்தை விருப்புவார்கள்”
“நான் ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன் – ஊழல்வாதிகளுடன் நான் ஒருபோதும் பணியாற்ற மாட்டேன். நான் அவர்களுடன் ஓர் அரசாங்கத்தை உருவாக்க மாட்டேன்” என்று சைட் சாத்திக் இன்று சனிக்கிழமை காலை டுவிட்டரில் பதிவேற்றிய காணொளியில் அவர் இச்செய்தி தெரிவித்துள்ளார்.