Home One Line P1 அஸ்மினுக்கு சொந்த உள்நோக்குத் திட்டம் இருந்தது – மகாதீர் கூறுகிறார்

அஸ்மினுக்கு சொந்த உள்நோக்குத் திட்டம் இருந்தது – மகாதீர் கூறுகிறார்

916
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.00 மணியளவில் இங்குள்ள யாயாசான் அல்புக்காரி கட்டடத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட துன் மகாதீர் நிருபர்கள் தொடுத்த பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“அஸ்மின் மீது தாங்கள் வருத்தத்தில் இருக்கிறீர்களா?” என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த மகாதீர் “அஸ்மினுக்கு சொந்த உள்நோக்கம் இந்த விவகாரத்தில் இருந்தது” என்று கூறினார்.

மகாதீர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அஸ்மின் அலி அவருக்கு நெருக்கமான சகாக்களில் ஒருவராகக் கருதப்பட்டார். அஸ்மினுக்கும், அன்வாருக்கும் இடையில் நிலவிய அரசியல் புகைச்சல்களுக்கு மகாதீரே தூபம் போட்டு வளர்த்தார் என்ற கருத்துகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தன்னுடன் கொண்டு வந்தது, ‘ஷெராட்டன் விடுதி’ திட்டத்தை செயல்படுத்தியது, என பல அம்சங்களில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் – அன்வார் இப்ராகிமை அடுத்த பிரதமராக வராமல் தடுத்ததில் – அஸ்மின் அலி முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.