கோலாலம்பூர் – ராப் போர்க்களம் (RAP Porkalam) என்ற பெயரில் தொடங்குகிறது யுத்தம்! மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியான இதனை ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7 மணி முதல் பதிவிறக்கம் செய்து ஆஸ்ட்ரோ சந்தாதாரர்கள் கண்டு மகிழலாம்.
மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியான RAP Porkalam-ஐ சனிக்கிழமை இரவு 7 மணி முதல் ஆஸ்ட்ரோ கோ, விண்மீன் எச்டி, அலைவரிசை 231-இல் ஒளிபரப்புவதோடு (ஸ்ட்ரீம்) செய்வதோடு ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்திலும் கண்டு களிக்கலாம்.
ஹிப் ஹாப் முன்னோடியான கவிதை குண்டர் எம்சி ஜாஸ் இப்போர்க்களத்தை வழிநடத்த மார்ச் 7-இல் மலரும் அத்தியாயமானது RAP Porkalam-இன் முதல் சுற்றின் தொடர்ச்சியாகும். இவ்வத்தியாயத்தில் நேர்முகத்தேர்வின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 16 சிறந்த போட்டியாளர்களில் நால்வரான Wheelchair Rapper, Tharagai, Taseltech, மற்றும் Kvin தாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி சிறந்த 8 போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்யும் வகையில் மிகக் கடுமையாக போட்டியிடுவர்.
Naren Zac, Madrassi, Eassya, மற்றும் Puchi, போன்றோரை உள்ளடக்கிய RAP Porkalam-இன் பிந்தைய அத்தியாயத்தை தவறவிட்ட மலேசியர்கள் அதனை ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக எங்கும் எப்போதும் பதிவிறக்கம் செய்து மகிழலாம்.
RAP Porkalam-இன் இரசிகர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 7 மணி முதல் விண்மீன் எச்டி, அலைவரிசை 231-இன் வழி, எந்த ராப்பர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார் என்பதை அறிந்துக் கொள்ளளாம்.
மேல் விவரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் மற்றும் ஆஸ்ட்ரோ உலகம் சமூக வலைத்தளங்களை வலம் வாருங்கள்: Facebook | Instagram