கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று புதன்கிழமை அமைச்சரவையின் முதல் சந்திப்புக் கூட்டத்திற்கு தலைமைத் தாங்கினார்.
காலை 9.25 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் 31 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர், மொகிதின் அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஒரு புகைப்பட அமர்வில் கலந்து கொண்டார்.
நேற்று திங்களன்று (மார்ச் 9), மொகிதின் அமைச்சரவையை அறிவித்தார். இது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக துணைப் பிரதமர் அறிவிக்கப்படாத அமைச்சரவையாகும்.