கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் சீன மற்றும் இந்திய சமூகங்களைச் சேர்ந்த பலர் பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணியை ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புவதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
“தேர்தல் நடக்கும் போது, சீனர்கள் பிஎன் கூட்டணியை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் சினார் ஹரியனுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“இந்தியர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பது உறுதி. எனவே வரும் தேர்தல்களில் மலாய்க்காரர்களுக்கான பெரும்பான்மை (வாக்குகள்) குறைக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
மொகிதின் யாசினின் அமைச்சரவையில் அதிகமான சீனர்களும் இந்தியர்களும் நியமிக்கப்படவில்லை என்பது குறித்து அவர் கருத்து கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
31 பேர் கொண்ட வரிசையில் சீன மற்றும் இந்திய அமைச்சர்களில், போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் மற்றும் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
மேலும், மூன்று சீன துணை அமைச்சர்களும், ஓர் இந்திய துணை அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.