கோலாலம்பூர்: மந்தமான பொருளாதாரம் மற்றும் கொவிட் -19 பாதிப்பின் பின்னணியில் அதன் சில்லறை வணிகம் மிகக் குறைவாக பாதிக்கப்படும் என்று ஏஈஓஎன் கம்பனி மலேசியா பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏஈஓஎன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷாபி ஷம்சுடின் கூறுகையில், அக்குழுவின் விற்பனை மையங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் அடிக்கடி வருவதில்லை என்றும், அதனால் பெரு அளவிலான பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்தார்.
“எங்கள் விற்பனை மையங்கள் மற்றும் வளாகங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல சமநிலையைக் கொண்டுள்ளன. வீட்டு தளவாடம் மற்றும் உடல் அலங்காரப் பொருட்கள் விற்பனையில் சிறிது சரிவைக் கண்டன. ஆனால் இவை மளிகை மற்றும் பல்பொருள் அங்காடி வணிகங்களால் குறைக்கப்பட்டுள்ளன.”
“பிப்ரவரி தொடக்கத்தில் தென் பகுதி கடைகளில் குறிப்பாக சிங்கப்பூர் வாடிக்கையாளர்களிடமிருந்து மளிகை விற்பனை அதிகரித்ததை நாங்கள் கண்டோம்,” என்று அவர் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.