கோலாலம்பூர்: மலேசியாவில் முதல் முறையாக கொவிட்-19 பாதிக்கப்பட்டோரிடம் எந்த தொடர்பும் இல்லாத நபருக்கு அந்நோய் கண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கோ, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலோ இல்லாதது குறிப்பிடத்தக்கது.
இன்ப்ளூயன்ஸா போன்ற நோய் (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்று (எஸ்ஏஆர்ஐ) உள்ளவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 600 மாதிரிகள் குறித்து சுகாதார அமைச்சகம் கண்காணிப்பு நடத்திய பின்னர் இந்த வழக்கு கண்டறியப்பட்டதாக சுகாதார இயக்குநர் டத்துக் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
அமைச்சகம் 600 மாதிரிகளை சேகரித்தது – 138 எஸ்ஏஆர்ஐ மற்றும் 462 இஎல்ஐ உடன் தொடர்புடையது. நேற்று, அந்த மாதிரிகளில் ஒன்று கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சோதனைகள் உறுதிப்படுத்தின.
“இந்த நோய்க்கான காரணத்தை அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது,” என்று அவர் கூறினார்.
மலேசியாவில் நேற்று புதன்கிழமையுடன் கொவிட் -19- இன் வழக்குகள் மொத்தமாக 149-ஆக பதிவாகியுள்ளன.