Home வாழ் நலம் பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் தளமாக விளங்குகிறது மலேசியன் தமிழ் மெட்ரிமோனி

பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் தளமாக விளங்குகிறது மலேசியன் தமிழ் மெட்ரிமோனி

1153
0
SHARE
Ad

படத்தில் உள்ளவர்கோலாலம்பூர்,ஜன.23- பலரிடம் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டால் தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை அமையவில்லை என்று கூறுவார்கள். அந்த கவலையை போக்கும் விதத்தில் பொருத்தமான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் ஒரு தளமாக மலேசியன் தமிழ் மெட்ரிமோனி விளங்கி வருகிறது.

அனைவருக்கும் நன்கு அறிமுகமான பாரத் மெட்ரிமோனியின் கீழ் இயங்கும், மலேசியன் மெட்ரிமோனி கடந்த 2010ஆம் ஆண்டு மலேசியாவில் தொடங்கப்பட்டது. 10,000 மலேசிய உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட மலேசியன் தமிழ் மெட்ரிமோனி தற்போது 1 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்று மலேசியன் தமிழ் மெட்ரிமோனியின்  பிரதிநிதி  மீனாகுமாரி (படம்) தெரிவித்தார்.

www.tamilmartimony.com என்ற இணையத்தளத்தின் வழி தங்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்து பலர் மணமேடை கண்டுள்ளனர். இதே போல், திருமணமாகாதவர்கள், திருமணத்திற்காக காத்திருப்பவர்கள், மலேசியன் தமிழ் மெட்ரிமோனியின் சேவைகள் என்ன என்பதை தெரிந்துக்கொண்டு முழுமையாக பயனுற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றார்.

#TamilSchoolmychoice

இன்றைய நவீன காலக்கட்டத்தில் பலர் திருமண வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை சந்திக்காதது தான். தங்களின் கல்வி, வசதி, அழகு ஆகியவற்றிக்கு ஏற்றவாறு வாழ்க்கைத்துணையை இன்னும் தேடி கொண்டிருக்கலாம். மனைவியை இழந்தவர்கள், கணவரை இழந்தவர்கள் இப்படி யாராக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப திருமண சேவைகளை சிறப்பாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் வழங்கி வருகிறது மலேசியன் தமிழ் மெட்ரிமோனி.

பலர் தங்களுக்கு இணையத்தளத்தில் சென்று வரன் தேடும் அளவிற்கு நேரம் இல்லை என்று கூறுவர். தாங்கள் எதிர்பார்க்கும் வரன் குறித்த தகவல்களை மலேசியன் தமிழ் மெட்ரிமோனி அதிகாரிகளிடம் வழங்கினால் அவர்களே வரன் தேடி தருவர். அவர்களில் உங்கள் பிடித்த வரனோடு இரு குடும்பத்தாரும் சந்தித்து பேசி கொள்ளலாம்.

சிலர் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கும் ‘அஸ்ட்ரோ மேட்ச் சர்வீஸ்’ மூலமாகவே ஜாதகப் பொருத்தமும் பார்த்து கொள்ளலாம்.

மலேசியன் தமிழ் மெட்ரிமோனி Single Night and Parents Meet and Greet போன்ற பல நிகழ்வுகளை வாடிக்கையாளர் வசதிக்காக ஏற்பாடு செய்து தருகிறோம். மேலும் அனைத்து வாடிக்கையாளர்களின் விவரங்களும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் மீனா குமாரி குறிப்பிட்டார். மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை வளாகத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மலேசியன் தமிழ் மெட்ரிமோனி கூடாரம் ஒன்றை அமைத்துள்ளது. அங்கு சென்றும் அதிகமான விவரங்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

மலேசியன் தமிழ் மெட்ரிமோனி குறித்த மேல் விவரங்கள் பெற 03-2272 5521, 03-2273 5521, 03-2276 2521 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.tamilmatrimony.com.my என்ற இணையத்தின் வழியாகவோ பெறலாம்.