Home One Line P2 மலேசியப் பங்குச் சந்தை 2008-க்குப் பிறகு மோசமான வீழ்ச்சி

மலேசியப் பங்குச் சந்தை 2008-க்குப் பிறகு மோசமான வீழ்ச்சி

737
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எந்த ஒரு மாதத்திலும் 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வருவது பொதுவாக துரதிர்ஷ்டமாக நாளாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது. அதே போல நேற்று வெள்ளிக்கிழமை மார்ச் 13 என்பது மலேசியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதிலும்கூட மோசமான, துரதிர்ஷ்டவசமான நாளாக அமைந்து விட்டது.

எண்ணெய் விலை வீழ்ச்சி, கொவிட் 19 பாதிப்புகளால் உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த வேளையில், மலேசியாவின் பங்குச் சந்தையும் 2008-க்குப் பிறகு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது.

மலேசியப் பங்குச் சந்தை நேற்று 1,344.75 புள்ளிகள் என்ற நிலையில் முடிவடைந்தது. 74.68 புள்ளிகள் – அதாவது 5.26 விழுக்காடு வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தையின் விலை இறக்கங்கள் 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழும் மிகவும் மோசமான இறக்கங்களாகும்.

#TamilSchoolmychoice

2008-இல் அமெரிக்காவின் வீட்டுக் கடன்கள் பிரச்சனைகளால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகள் இறங்குமுகமாயின. அதில் மலேசியப் பங்குச் சந்தையும் ஒன்று.

2008, மார்ச் 10-ஆம் தேதியன்று ஒரே நாளில் மலேசியப் பங்குச் சந்தை 123 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. அதற்குப் பின்னர் நேற்றுதான் ஒரே நாளில் 91.58 புள்ளிகள் வீழ்ச்சியை மலேசியப் பங்குச் சந்தை சந்தித்திருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகளிலும் இதே நிலைமைதான் ஏற்பட்டது. கொவிட் 19 பாதிப்பு உலக மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் நுழைந்திருப்பதால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

போதாக் குறைக்கு எண்ணெய் விலை வீழ்ச்சியும் சேர்ந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எப்போதும் ஏறுமுகமாக இருந்து வந்த பங்குச் சந்தைகள் இறக்கத்தைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றன.

இந்த நிலைமை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதுதான் இப்போதைக்கு விடை தெரியாத கேள்வி!