கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் புதல்வர்கள் பல வணிகங்களிலும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களிலும் பங்குகளைக் கொண்டிருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
அந்த வகையில் மகாதீரின் மகனும் முன்னாள் கெடா மந்திரி பெசாருமாகிய முக்ரிஸ் மகாதீர் ஓப்கோம் என்ற (Opcom Holdings Bhd) பங்குச் சந்தை நிறுவனத்தில் தான் கொண்டிருந்த 24.6 மில்லியன் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக பங்குச் சந்தைக்கு அறிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அவர் அந்த நிறுவனப் பங்குதாரராகத் தொடரவில்லை.
பங்குச் சந்தைக்குத் தெரிவித்த இன்னொரு தனியான பதிவில் முக்ரிஸ் மகாதீர் மனைவியான டத்தின் நோர்சியதா சக்காரியாவும் ஓப்கோம் நிறுவனத்தில் தான் கொண்டிருந்த பங்குகளை விற்று விட்டதாக அறிவித்திருக்கிறார்.
டத்தின் நோர்சியதா சக்காரியா தான் கொண்டிருந்த 18 மில்லியன் ஓப்கோம் பங்குகளை திறந்த சந்தையில் விற்று விட்டதாக அறிவித்திருக்கிறார்.