Home One Line P2 பிபிசி செய்தி சேவைகளுக்கு சீனா தடை

பிபிசி செய்தி சேவைகளுக்கு சீனா தடை

732
0
SHARE
Ad

இலண்டன் : ஹாங்காங் விவகாரத்தில் பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையில் முற்றிவரும் மோதல்களைத் தொடர்ந்து பிபிசி உலகச் செய்திகளின் ஒளிபரப்புகளுக்கு சீனா தடை விதித்துள்ளது.

இந்தத் தகவலை சீனாவின் தேசிய வானொலி, தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்தது.

ஆப்கோம் (Ofcom) என்பது பிரிட்டனில் இயங்கும் ஊடகங்களைக் கண்காணிக்கும், நிர்ணயிக்கும் அரசாங்க அமைப்பாகும். இந்த அமைப்பு  ஒரு வாரத்துக்கு முன்னர் சீனாவின் சைனா குளோபல் டெலிவிஷன் நெட்வோர்க் (China Global Television Network, or CGTN) பிரிட்டனில் ஒளிபரப்பு சேவைகளை வழங்குவதற்கு தடை விதித்தது.

#TamilSchoolmychoice

இதற்கு பதிலடியாகவே சீனா பிபிசி சேவையைத் தடை செய்யும் நடவடிக்கையை சீனா எடுத்துள்ளது.

உண்மையைக் கூறுவதிலும், நடு நிலை வகிப்பதிலும் பிபிசி தவறி விட்டது என சீனா தடைக்கான காரணமாகக் கூறியிருக்கிறது.