Home One Line P2 ஆஸ்ட்ரோவில் “குயின்” வரலாற்றுத் தொடர் முதல் ஒளிபரப்பு

ஆஸ்ட்ரோவில் “குயின்” வரலாற்றுத் தொடர் முதல் ஒளிபரப்பு

558
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வரலாற்று நாடகத் தொடர், ‘குயின்’ மலேசியாவில் பிரத்தியேகமாக, ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது. பிப்ரவரி 20, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் இந்தத் தொடர் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

பிப்ரவரி 20 முதல் மலேசியாவில் பிரத்தியேகமாக முதல் ஒளிபரப்புக் காணும் குயின் எனும் அற்புதமான வரலாற்று திரைப்படத் தொடரை அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் கண்டு மகிழலாம்.

வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் ஒரு தைரியமான பெண்ணின் வலிமையைச் சித்தரிப்பதோடு முன்னாள் தமிழக முதல்வரும், பிரபல நடிகையுமான, மறைந்த ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது, குயின்.

#TamilSchoolmychoice

விருது பெற்ற இயக்குநர், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கியுள்ள 11 அத்தியாயங்களைக் கொண்ட இந்த அற்புதமானத்  தொடரில் பன்முகத் தன்மைக் கொண்ட திறன்மிக்க நடிகை, ரம்யா கிருஷ்ணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, இந்திரஜித் சுகுமாறன், அஞ்சனா ஜெயபிரகாஷ், அனிகா சுரேந்திரன் மற்றும் வம்சி கிருஷ்ணா என பிற திறமையான நடிகர்களும் நடித்துள்ளனர். அனித்தா சிவகுமார் எழுதிய அதே பெயரைக் கொண்ட ஒரு நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, குயின்.

தொடர்ந்துக் கல்விக் கற்க வேண்டும் என்ற விருப்பமிருந்தாலும் 15 வயதில் ஒரு நடிகையாக திரையுலகில் இணைய நிர்ப்பந்திக்கப்படும் சக்தி சேஷாத்ரி (ரம்யா கிருஷ்ணன்) என்ற புத்திசாலித்தனமான இளம் பெண்ணின் வாழ்க்கையை இத்தொடர் சித்தரிக்கின்றது. தனது சிறந்த ஆளுமையால், குறுகியக் காலத்தில் ஒரு சிறந்த நடிகையாக மாறும் சக்தி சேஷாத்ரி, பின்னர் அரசியல் உலகிற்குள் நுழைந்து, விரைவில் தமிழகத்தின் இளைய முதல்வராக ஆட்சியைக் கைப்பற்றி, அரசியலில் தனக்கென ஒரு பாரம்பரியத்தை உருவாக்குகிறார்.

குயின் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) கண்டு களியுங்கள் அல்லது ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.