தொடர்ந்து கொவிட்-19 பாதிப்புகளைக் குறைப்பதற்கும், கையாள்வதற்கும் பலவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருபவர் நூர் ஹிஷாம்.
நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நூர் ஹிஷாம் ஒன்றாக தனது குடும்பத்தினரோடு நடைப் பயிற்சி மேற்கொள்ளும் படத்தையும் பதிவிட்டார்.
உடல் நலத்தைப் பேணும் வாழ்க்கை முறையையும் நாம் ஒன்றாக மேற்கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட நூர் ஹிஷாம் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற தமிழ் பழமொழியும் இதைக் கூறுகிறது எனப் பதிவிட்டு அந்தப் பழமொழியை தமிழிலேயே பதிவிட்டிருக்கிறார்.
அந்த டுவிட்டர் பதிவைக் கீழே காணலாம்:
Comments