Home நாடு துன் மகாதீர் மீண்டும் லங்காவியில் களமிறங்குகிறார் – மகன் முக்ரிஸ் ஜெர்லுனில் போட்டி!

துன் மகாதீர் மீண்டும் லங்காவியில் களமிறங்குகிறார் – மகன் முக்ரிஸ் ஜெர்லுனில் போட்டி!

432
0
SHARE
Ad

லங்காவி : பெஜூவாங் கட்சியின் தலைவர் துன் மகாதீர் முகமட் மீண்டும் லங்காவியில் போட்டியிடுகிறார். கடந்த 2018 பொதுத் தேர்தலில் முதன் முறையாக அரசியல் ஓய்வுக்குப் பிறகு லங்காவி தொகுதியில் போட்டியிட்ட மகாதீர் அபார வெற்றியைப் பெற்றார்.

அவரின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அவர் மீண்டும் அந்தத் தொகுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் அவரின் மகன் முக்ரிஸ் மகாதீர் பெஜூவாங் கட்சி சார்பில் மீண்டும் (கெடா) ஜெர்லுன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

மேலும் சில தொகுதிகளிலும் வேட்பாளர்களின் பெயர்களை பெஜூவாங் அறிவித்துள்ளது. அவர்களில் கைருடின் அபு ஹசானும் ஒருவர். மகாதீரின் தீவிர ஆதரவாளரான கைருடின் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தித்திவாங்சா தொகுதியில் போட்டியிடுவார்.