Home One Line P2 ராப் போர்க்களம் மற்றும் பாலிஒன் – மார்ச் மாத திரைப்பட வரிசைகளின் சிறப்பம்சங்கள்

ராப் போர்க்களம் மற்றும் பாலிஒன் – மார்ச் மாத திரைப்பட வரிசைகளின் சிறப்பம்சங்கள்

886
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்த மார்ச் மாதத்தில் அஸ்ட்ரோவின் விண்மீன் எச்டி அலைவரிசையில் ஒளிபரப்பாகவிருக்கும் ராப் போர்க்களம் (RAP Porkalam) மற்றும் பாலிஒன் எச்டி (BollyOne HD) அலைவரிசையில் ஒளிபரப்பாகவிருக்கும் திரைப்பட வரிசைகளின் சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.

சனிக்கிழமைகளில் ராப் போர்க்களம் (RAP Porkalam)

Vinmeen HD (அலைவரிசை 231), 7pm – சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும்.

எங்கும் எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம்  செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

போட்டியாளர்கள்: ரக்லசி விசுன், ரூபன் ராஜ், சி.ஜே.எல், மற்றும் சி.ஜே. சதீஷ்

மார்ச் 14 ஒளியேறிய தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினாறு போட்டியாளர்களில் நால்வரான ரக்லசி விசுன், ரூபன் ராஜ், சி.ஜே.எல், மற்றும் சி.ஜே. இடம் பெற்றனர்.

கவிதை குண்டர் எம்சி ஜேசால் பயிற்றுவிக்கப்பட்ட இவர்கள் உற்சாகமான தாளம் மற்றும் ரைம்களைக் கொண்டு தமிழ் ராப்பின் மூலம் மேடையை அலங்கரிப்பர். இவர்களில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பதை அறிய அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

வியாழன், 19 மார்ச்

சான் கி ஆன்ந் – திரைப்படம்

BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm| எங்கும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தாப்சி பன்னு மற்றும் பூமி பெட்னேகர்

விருது பெற்ற இந்திய வாழ்க்கை வரலாற்று நாடகப் திரைப்படமான ‘சான் கி ஆன்ந்’ உலகின் மிகப் பழமையான ஷார்ப்ஷூட்டர் சாம்பியன்களில் இருவர் பற்றிய உண்மைக் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தில், 60 அகவையை அடைந்த சந்திரோ மற்றும் பிரகாஷி, தங்களின் ஷார்ப்ஷூட்டர் திறனை தற்செயலாக அறிவர். ஒரு தலைச்சிறந்த பயிற்றுநரின் உதவியுடன் தங்கள் திறனை வலுப்படுத்தி பல்வேறு ஷூட்டர் போட்டிகளில் அவர்கள் பங்கேற்பர்.

வியாழன், 26 மார்ச்

செக்சன் 375 – திரைப்படம்

BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm| எங்கும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அக்‌ஷய் கன்னா, ரிச்சா சாதா மற்றும் ராகுல் பாட்

இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹன் குரானா தனது ஆடை வடிவமைப்பாளரான அஞ்சலி டாங்கிள் என்பவரால் பாலியல் பலாத்காரம் குற்றம் சாட்டப்பட்டு அக்குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவார்.