புது டில்லி: கொவிட்-19 பெருந்தொற்று உலகெங்கிலும் பரவி வருவதை அடுத்து, அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) மக்களிடையே உரையாற்றவுள்ளார்.
கொவிட்-19 தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சிகளை மறு ஆய்வு செய்வதற்காகப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு அவர் உரையாற்றுவார்.
தற்போது, இந்தியாவில் இதுவரை 151 கொரொனாவைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மூவர் இதுவரையிலும் இந்த நோயினால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரங்களில், பல்வேறு மாநில அரசுகள் கல்வி நிறுவனங்களை மூடிவிட்டன. பேரங்காடிகள், விளையாட்டு கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை இரத்துசெய்து, மக்கள் பயணம் செய்யவும் தடை வெளியானது.
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.