கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சுமார் 4,000 பேர் இன்னும் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளவில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
“காவல்துறையினர் அவர்களை தாங்களே கண்டுபிடிப்பதற்கான ஒரு முடிவை ஏற்கனவே எடுத்துள்ளனர். ” என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுகாதார மையங்களில் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இஸ்மாயில் சப்ரி கேட்டுக் கொண்டார்.
அக்கூட்டத்தில் சுமார் 14,500 மலேசியர்களும் 1,500 வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற 10,650 பேர் இதுவரையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 2,000 ரோஹிங்கியாக்களை மலேசிய அதிகாரிகள் தேடி வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளனர்.