Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 14 வரை நீட்டிப்பு

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 14 வரை நீட்டிப்பு

571
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – (கூடுதல் தகவல்களுடன்) தற்போது நடப்பில் இருந்துவரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான கால அவகாசம் எதிர்வரும் ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்துள்ளார்.

இந்த காலநீட்டிப்புக்கான கா அவகாசத்தை முன் கூட்டியே அறிவிப்பதன் மூலம் பொதுமக்களை அந்தக் காலக் கட்டத்திற்கு தயார் செய்ய ஏதுவாக இப்போதே இந்த அறிவிப்பை வெளியிடுவதாக மொகிதின் யாசின் தெரிவித்தார்.

ஏற்கனவே, தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருப்பவர்கள், இந்த வார இறுதியில் மீண்டும் கோலாலம்பூருக்கு அவசரம் அவசரமாக திரும்ப வேண்டியதில்லை என்றும் அதற்கேற்பவும் இந்த அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்படுகிறது என்றும் மொகிதின் கூறினார்.

தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக இன்று பிற்பகலில் சிறப்புரையாற்றிய மொகிதின் யாசின் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எங்கு தங்கியிருக்கிறீர்களோ அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.