Home One Line P1 கொவிட்-19: நிலைமை மோசமடைய வாய்ப்பு- தயார் நிலையில் சுகாதாரத் துறை!- பிரதமர்

கொவிட்-19: நிலைமை மோசமடைய வாய்ப்பு- தயார் நிலையில் சுகாதாரத் துறை!- பிரதமர்

554
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியா உட்பட இன்று உலகத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் கொவிட்-19 பாதிப்பை உணர்ந்து, நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால், நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க பெரிய அளவில் சுகாதார பரிசோதனைகளை நடத்தும் திட்டத்தை அரசாங்கம் அதிகரிக்கும்.

குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பாரிய பரிசோதனைகளை உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார்.

#TamilSchoolmychoice

“எதிர்காலத்தில் புதிய சம்பவங்கள் தொடர்ந்து பதிவு செய்யப்படும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. எனவே, சுகாதார அமைச்சகம் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. கொவிட்-19 நோயாளிகளுக்கு நாடு முழுவதும் 34 மருத்துவமனைகளில் 3,585 படுக்கைகளை வழங்குவதும் இதில் அடங்கும்.”

“தற்போது மருத்துவமனை படுக்கைகளில் 34 விழுக்காடு பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 66 விழுக்காடு அதிக நோயாளிகளுக்கு இடமளிக்க உள்ளது.

“மருத்துவமனைகளின் வசதியைத் தாண்டி கொவிட்-19 நேர்மறை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தற்காலிக தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக பணியாற்ற பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன,” என்று அவர் இன்று புதன்கிழமை மதியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய சிறப்பு செய்தியில் தெரிவித்தார்.