Home One Line P2 “கடவுள் நமது இதயத்தில்தான் இருக்கிறார். வழிபாட்டுத் தலங்களில் கூடவேண்டாம்” – ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமான வேண்டுகோள்

“கடவுள் நமது இதயத்தில்தான் இருக்கிறார். வழிபாட்டுத் தலங்களில் கூடவேண்டாம்” – ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமான வேண்டுகோள்

563
0
SHARE
Ad

சென்னை – வழக்கமாக பொது விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கொவிட்-19 தொற்று நோய் குறித்து உருக்கமான வேண்டுகோளை ஒரு நீண்ட பதிவாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மிக மோசமான இந்த அழிவிலிருந்து நம்மைப் பாதுகாக்க துணிச்சலோடும், தியாக உணர்வோடும், தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பாடுபடும் மருத்துவர்கள், தாதிகள், மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் ரஹ்மான், கண்ணுக்குத் தெரியாத இந்த விரோதியை எதிர்த்து ஒழிக்க, நாம் அனைவரும் நமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்றும், மனித நேயத்தையும், ஆன்மீகத்தையும் காட்ட வேண்டிய தருணம் இது  எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“மிகவும் புனிதமான இடம் நமது இதயம்தான். அங்குதான் கடவுள் குடிகொண்டிருக்கிறார். எனவே, வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். அரசாங்க ஆலோசனையை அனைவரும் கேட்க வேண்டும். கொரொனாவைப் பரப்பி மற்ற உயிர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்த வேண்டாம். உங்களுக்கு கொரொனா தொற்று இருக்கும் என்ற முன்னெச்சரிக்கையைக் கூட இந்த நோய் உங்களுக்குத் தருவதில்லை. எனவே, உங்களுக்கு இந்தத் தொற்று இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். நம்மை தனிமைப்படுத்திக் கொள்வோம். கொரொனா பரவாமல் தடுப்போம். ஒருவருக்கொருவர் கருணையையும் அன்பையும் பரிமாறிக் கொள்ள வேண்டிய நேரம் இது. வதந்திகளையும், பொய்ச் செய்திகளையும் பரப்பி மக்களிடையே குழப்பத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்த வேண்டாம். மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பு நமது கரங்களில்தான் இருக்கிறது” என ஏ.ஆர்.ரஹ்மான் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆங்கிலப் பதிவு பின்வருமாறு :