Home One Line P1 கொவிட்-19: வாழ்க்கை நடைமுறைகள் மாறிவிட்டன- ஒரு வருடத்திற்கு கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்!

கொவிட்-19: வாழ்க்கை நடைமுறைகள் மாறிவிட்டன- ஒரு வருடத்திற்கு கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்!

719
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், எந்தவொரு மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

கொவிட்-19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான தற்போதைய நடைமுறை, சமூகத்தில் நீண்ட காலத்திற்கு தொடர வேண்டி உள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவடையுமா இல்லையா என்பது நமக்குத் தெரியாது என்றாலும், நம் நடைமுறைகள் மாறிவிட்டன. முன்பு இருந்ததை போல இருக்க முடியாது. உதாரணமாக, கைகுலுக்கியப் பிறகு, கை கழுவுதல் உட்பட பாதுகாப்பான இடைவெளியை நாம் கடைப்பிடிக்க வேண்டும்”

“(கூடுதலாக) கூட்டங்கள். ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நாம் உற்சாகமான பொதுக் கூட்டங்களை ஊக்குவிப்பதில்லை” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை கூறினார்.