Home One Line P1 கொவிட்-19: 10 வினாடிகளில் நோயறிதல் அமைப்பு வுஹானிலிருந்து மலேசியா வந்தடைந்தது!

கொவிட்-19: 10 வினாடிகளில் நோயறிதல் அமைப்பு வுஹானிலிருந்து மலேசியா வந்தடைந்தது!

519
0
SHARE
Ad
படம்: நன்றி அவானி

கோலாலம்பூர்: கொவிட்-19- க்கு எதிரான மலேசியாவின் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் சீனா வுஹானில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

முன்னதாக நேற்று வெள்ளிக்கிழமை, வுஹானில் உள்ள இரண்டு கொவிட் சிறப்பு மருத்துவமனைகளில் கண்டறிதலை மேம்படுத்த உதவும் ஓர் அமைப்பு கோலாலம்பூர் மருத்துவமனையில் பொறுத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு அவானியில் பேசிய ஸ்கைமிண்ட் நியூரோபியோனிக்ஸ் (Skymind Neurobionix) நிறுவனத்தின் துணைத் தலைவர் எட்வர்டோ கோன்சலஸ் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

வுஹானில், ஹூ ஷென் ஷான் மருத்துவமனை மற்றும் லீ ஷேன் ஷான் மருத்துவமனை ஆகியவை கணினிமயமாக்கப்பட்ட ஊடுருவி நுண்ணோக்கி (சிடி ஸ்கேன் இமேஜிங்) வெறும் 10 வினாடிகளில் பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டவை.

ஆக்சியல் ஏஐ (Axial AI) என்று அறியப்படும் இந்த அமைப்பு விரைவான நோயறிதலுடன் மட்டுமல்லாமல், முக்கியமான வளங்களை மிகவும் திறமையாக நிர்வகிக்கவும் உதவியது.

“இந்த அமைப்பைப் பற்றி சுவாரஸ்யமானது என்னவென்றால், இது ஒரு மேகக்கணி அமைப்பு அல்ல. கணினி சேவையக அமைப்பை, நியூரோபியோனிக்ஸ் மலேசியா ஆய்வகத்தில் வெற்றிகரமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிறுவியுள்ளோம், ”என்று கோன்சலஸ் கூறினார்.

“நான் கோலாலம்பூர் மருத்துவமனையில் இருந்தேன். அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி மருத்துவர்களுக்கு கற்றுக் கொடுத்து, எதிர்கால நோயறிதல் சோதனைகளில் அதை எவ்வாறு இணைத்துக்கொள்வது என்பதையும் உறுதிசெய்தேன்.” என்று அவர் கூறினார்.