கோலாலம்பூர்: தொடர்ந்து நான்காவது வாரமாக, இன்று (ஏப்ரல் 4) நள்ளிரவுத் தொடங்கி எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
ரோன்97 மற்றும் ரோன்95 பெட்ரோல் விலை 8 சென் குறைந்து லிட்டருக்கு 1.60 ரிங்கிட் மற்றும் 1.38 ரிங்கிட்டாக விற்பனை செய்யப்படும்.
டீசலின் விலையும் 10 சென் வீழ்ச்சியடைந்து லிட்டருக்கு 1.58 ரிங்கிட் என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.
புதிய கட்டணங்கள் இன்று சனிக்கிழமை முதல் ஏப்ரல் 10 வரை நடைமுறைக்கு வரும்.
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடையே ஏற்பட்ட தகராறு மற்றும் கொவிட் -19 தொற்றுநோயால் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயினும், தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இந்த சலுகையை பெரிதளவில் அனுபவிக்க இயலாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.